Objects
General


info@arunaicharitabletrust.com

Arunai Friends Association

DOWNLOAD

State & National Awards
for Panta Reddiar Teachers

TPRA AWARDS
for School Toppers 2010

ACT AWARDS
for School Toppers 2010


தமிழில் எழுதியவை

5. 4. Article in Junior  Vikatan

- S.Kumar

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது - காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.
மிக அதிகமாகச் சாப்பிடுவது - இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3.
புகை பிடித்தல் - மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.
நிறைய சர்க்கரை சாப்பிடுதல் - நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5.
மாசு நிறைந்த காற்று - மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.
தூக்கமின்மை - நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது - தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.
நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது - உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது - மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10.
பேசாமல் இருப்பது - அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

நன்றி : டாக்டர் M. சாதிக் தாருல் ஷஃபா.

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும்போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகாகவிபாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க 
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?


பஸ் ரூட்ல பஸ் போகும்ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ 
பரவாயில்லை என்று!!


 அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!


மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை 
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு 
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
  
டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!


ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
  
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியேஎன்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பாஎனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே 
ஓடி போய்டாங்க!!


கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்உங்க மொபைல்' 
வரும் பொது "ஒன் நியூ ��

Mokka poddu.. Mokka poddu...

             Posted by S.KUMAR @ Singapore

வீட்டுக்கு வீடு தோட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 'ஐ.ஓ.பி. தோட்டக்கலைத் திட்டம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், 500 சதுர அடி நிலம் உள்ளவர்கள்கூட இந்தத் திட்டத்தில் கடன் வாங்கி தோட்டம் அமைக்கலாம். வீடுகள், அலுவலகங்கள்... போன்ற இடங்களில் வீட்டுத்தோட்டம் அமைத்து அதன் மூலம் காய்கறி, பூக்களை விளைவிக்க வேண்டும் என்பதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம்.தோட்டம் அமைக்கத் தேவையான தண்ணீர் வசதி இருக்க வேண்டும். வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு நிரந்தர வருமானம் இருக்க வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள வீடுகளிலும் இதன் மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம். நிறுவனங்களும் இதன் மூலம் பயன் பெறலாம். நிறுவனத்துக்கு சொந்தமாக 1,000 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இடமாக இருக்க வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

தோட்டம் அமைக்க அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.வேலையில் இருப்பவர்கள் என்றால், தங்களது சம்பளத்தை, தான் கடன் வாங்கும் ஐ.ஓ.பி கிளையின் மூலம் பெற்றுக் கொள்வதுபோல ஏற்பாடு செய்ய வேண்டும். வேலைக்குச் செல்லாதவர்கள் மற்றும் நிறுவனங்கள் கடன் தொகையில் 50% மதிப்புள்ள சொத்துக்களை அடமானமாகக் கொடுக்க வேண்டும். தனிநபர்கள் 12 முதல் 24 மாதத் தவணைகளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். நிறுவனங்கள் 12 முதல் 36 மாதத் தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் அனைத்து ஐ.ஓ.பி. வங்கிக் கிளைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் வங்கியில் சென்று கடன் வாங்கும்போது பலவித பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். தகுதியிருந்தும் கடன் கொடுக்கமாட்டார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில்  1800 425 4445  1800 425 4445 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உங்கள் புகார் குறித்து குறைதீர்க்கும் பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.